தமிழி கல்வெட்டுகள்-11
பெருமாள்மலை தமிழி:
மதுரை மாவட்டத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது முத்துப்பட்டி இங்குள்ள மலை பெருமாள்மலை, கரடிப்ட்டிமலை என அழைக்கப்படுகிறது! 1910 ம் ஆண்டு இங்கு மூன்று கல்வெட்டுகள் அறியப்பட்டன,எனினும் இரண்டே படிக்கும் நிலையில் உள்ளது. குகையின் முகப்பில் இரு தீர்த்தங்கரர் சிலை புடைப்புச்சிற்பமாய் உள்ளது. படுக்கையில் ஒரு தீர்த்தங்கரர் சிற்பமும் உள்ளது.
முதல் கல்வெட்டு:
நாகபேரூதைய் முசிறி கோடன் எளமகன்
விளக்கம்:
சேரநாட்டு கடற்கரை பட்டினமான முசிறியிலிருந்து இளமகனான கோடன் என்பவரின் கொடை என பொருள்கொள்ளலாம். கேரளத்தின் பட்டணம் எனும் ஊரில் நடந்த அகழாய்வில் தமிழி எழுத்துப் பொறிப்புள்ள பானைகள் கிடைத்தது. அவ்விடமே முசிறியாய் கருதப்படுகிறது! இதில் வரும் எளமகன் எனும் சொல் இளமகன் அல்லது இளையர் என பொருள் கொள்ளலாம். இளையர் என்பதற்கு போர்வீரன், எனப்பொருள் இச்சொல் பல்லவர் நடுகற்களில் பயின்று வருகிறது. நாகபேரூர் அருகேயுள்ள நாகமலைபுதுக்கோட்டையை குறிப்பதாய் இருக்கலாம். இப்பெயர் வேள்விக்குடி செப்பேடிலும் வருகிறது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் கல்வெட்டு:
சைய்அளன் விந்தைஊர் கவிய்
விளக்கம்:
விந்தையூரை சேர்ந்த சைய்அளன்(அலாகாபாத் தூண் கல்வெட்டில் இப்பெயர் வருகிறது) என்பவர் அமைத்துக்கொடுத்த குகை என்பது இதன் பொருள்,இயற்கையாய் அமைந்த குகையை இவர் பதனிட்டு கொடுத்தாருக்கலாம்.கெவி என்பதற்கு குகை என ஒருபொருளும் உண்டு! இன்றும் கிருஷ்ணகிரி பகுதிகளில் குகையை மக்கள் இவ்வாறு அழைப்பதுண்டு!
மூன்றாம் கல்வெட்டு:
திடிக் காத்தான்.... மன...(எ)ய்
விளக்கம்:
திடியன் என்ற குன்றுள்ள ஊரைச்சார்ந்த காத்தான் என்பவனின் கொடையே இந்த கற்படுக்கை என கூறலாம்.







No comments:
Post a Comment