தமிழி எழுத்துகள்-03

தமிழி எழுத்துகள்-03

மேட்டுப்பட்டி தமிழி:

மதுரையிலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் உசிலம்பட்டி அருகே உள்ளது மேட்டுப்பட்டி, இவ்வூர் சித்தர்மலை எனவும் அழைக்கப்படுகிறது! 1908 ல் இக்கல்வெட்டுகள் கண்டறியப்பட்டது. இங்கு மொத்தம் 10 கல்வெட்டுகள் காணப்படுகிறது! 

1.அமணன் மதிரை அத்திரன் உறை உதயனஸ(இக்கல்வெட்டு குகைத்தளத்தின் முகப்பில் உள்ளது)

விளக்கம்:
 கல்வெட்டில் முதன்முதலாய் மதுரையைப் பற்றி வரும் கல்வெட்டு இது. இதே காலகட்டத்தை சேர்ந்த அழகர்மலையிலும் மதுரையை குறித்து வரும். மதுரையைச்சேர்ந்த அத்திரன் எனும் அமணரின்(முற்றும் துறந்தவர்?)உறைவிடம் இது. அவருக்காய் இவ்விடத்தினை ஏற்படுத்தியவர் உதயணன்.

2.அந்தை அரிய்தி

விளக்கம்:

இப்படுக்கை தானமளித்தவர் அந்தை அரிய்தி என கொள்ளலாம்.

3.அந்தை இராவதன்

விளக்கம்:
அந்தை இரவாதன் என்பவரின் தானமாய் இப்படுக்கையை அளித்துள்ளார்.

4.(ம)திர அந்தை (வி)ஸீவன்

விளக்கம்:
மதுரையை சேர்ந்த அந்தை விஸீவன் இப்படுக்கையை அமைத்து கொடுக்கிறார்.

5.அந்தை சேந்தன் அதன்

விளக்கம்
அந்தை சேந்தன் அதன் என்பவர் படுக்கையை அமைத்தார் எனவும், அந்தை சேந்தஅ எபிரித்து தன் என்பதை தானம் எனவும் பொருள் கொள்ளப்படுகிறது.

6.சந்தந்தை சந்தன்

விளக்கம்:

சந்தன் எனும் இருவர் இப்படுக்கையை தானமளித்துள்ளனர். அந்தை எனும் சொல் இருவரையும் பிரித்துக் காட்டுகிறது!

7.பதின் ஊர் அதை

விளக்கம்:

பதினூரைச்சேர்ந்த அதை இதனை அந்தை என படித்துள்ளனர். அந்தை எனும் சொல் இவ்வூர் கல்வெட்டுகளில் நிறைய இடங்களில் வருகிறது! அந்தை என்பதனை மரியாதைக்குரிய சொல்லாய் பார்க்கப்படுகிறது.

8.குவிர அந்தை சேய் அதன்

விளக்கம்:
குவிரந்தை சேய் ஆதன் என்பவர் செய்து கொடுத்த இருக்கை இது. இதில் வரும் ஆதன் ஊனும் பெயர், தமிழின் தொன்மையான பெய்ர்களுள் ஒன்று. கீழடியில், இன்னும் பல இடங்களில் தொடர்ந்து கிடைத்து வருகிறது.

9.குவிரந்தை வேள் அதன்

விளக்கம்:
குவிரந்தை வேளாதன் என்பவர் செய்த இருக்கை 

10.திடி இல் அதன்

விளக்கம்:
திடிஇல் என்ற ஊரைச்சார்ந்த ஆதன் என்பவர் செய்து கொடுத்த இருக்கை என பொருள்.இன்றும் மேட்டுப்பட்டிக்கு தென்கிழக்கே திடியன் என்ற பெயரில் ஓர் ஊர் உள்ளது. திடியன் கூட்டம் என்று அங்கு ஒரு இனக்குழு இன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கு கிடைத்துள்ள கல்வெட்டுகள் கி.மு. 2 ம் நூற்றாண்டு என கருதப்படுகிறது! இம்மேலையின் பின்புறம் மிகப்பெரிய பாறைக்கீறலான நந்திஉருவம் Gandhi Rajan sir ஆல் கண்டறியப்பட்டது. இந்த Petroglyphs தென்னிந்திய அளவில் மிகப்பெரியது. மிகவும் உயரமான இம்மலையில் உச்சியிலிருந்து பார்த்தால் வைகையாறு பயணிக்கும்பாதை அழகாய் தெரியும்.  இம்மலைக்கு அருகேயுள்ள சித்தர்நத்தம் பகுதியில் பாறை ஓவியங்கள் காணப்படுகிறது! இம்மலைப்பகுதி கணவாய் பகுதியே அமைந்துள்ளது. எனவே இவ்வழியே பயணிக்கும் வணிகர்களின் ஆதரவாலே இப்படுக்கைககள் தானமளிக்கப்பட்டதை அறியலாம்.

















No comments:

Post a Comment