தமிழி எழுத்துகள் -08
கொங்கர் புளியங்குளம்:
மதுரை-தேனி சாலையில் செக்கானூரணிக்கு அருகேயுள்ளது கொங்கர்புளியங்குளம். தமிழி Siteகளில் அதிகம் கற்படுக்கைகள் அமைந்தது இங்கேதான். அனைத்து படுக்கைககளும் நன்றாய் வழவழப்பாய் இழைத்து செதுக்கப்பட்டுள்ளது. 1910 ம் ஆண்டு இங்கு கல்வெட்டுகள் இருப்பதை கண்டறிந்தனர். இங்கு மொத்தம் மூன்று தமிழி கல்வெட்டு உள்ளது. தமிழிகல்வெட்டுக்கு பக்கவாட்டில் கொஞ்சம் தொலைவில் ஒரு சமண தீர்த்தங்கரர் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. குகைத்தளத்தில் குறுகலான இடத்தில் சில பாறைஓவியங்களும் காணப்படுகிறது.
கல்வெட்டுகள்:
முதலாம் கல்வெட்டு:
குற கொடுபிதவன் உபசஅன் உபறுவஅ(ன்)
விளக்கம்:
குற என்பதனை "கூரை", "கூறு(பகுதி)" எனபொருள் கொள்ளப்படுகிறது. கொடுபித என்பதனை கொட்டுபித்தவன், இந்த படுக்கைகளை கொடுத்தவன் எனவும், உபசஅன் என்பதனை உபாசன் என்ற ஆசிரியராகவும் பொருள் காணப்படுகிறது! உபறுவன் என்பதற்கு கிணறு, குளம் தோண்டும் பணியாளரை குறிக்கும் சொல் எனவே,
உபாசனாகிய உபறுவன் கொடுத்த தானமாய் அளித்தது இக்கூரை என பொருள் கொள்ளலாம். இன்று அக்கூரை இல்லை.
இரண்டாம் கல்வெட்டு:
குறு கொடல்கு ஈத்தவன் செற்அதன்(ஒ)ன்
விளக்கம்:
செற்அதன் Or செராதன் இப்பகுதியை குடைவிப்பதற்கு தானமளித்ததை கல்வெட்டு கூறுகிறது. இறுதியில் ஓர் குறியீடு உள்ளது. இதனை பொன்னின் எடையை அல்லது எண்ணைக்குறிப்பதாய் கருதப்படுகிறது!
மூன்றாம் கல்வெட்டு:
பாகன் ஊர் பே(ர)தன்பிடன் இத்த வெபொன்
விளக்கம்:
பாகனூரைச் சேர்ந்த பிட்டன் என்பவர் அளித்த வெண்பொன் என்பது இதன் பொருள், இதில் இறுதியில் பொன்னின் நிறையை குறிக்கும் குறியீடும் உள்ளது. இதில் வரும் பாகனூர் முற்கால பாண்டியரின் வேள்விக்குடி செப்பேட்டில் வளம்பொருந்திய ஊராய் கூறப்பட்டுள்ளது. சோழவந்தான் அருகே உள்ளது இவ்வூர். வைகையாற்றின் வளம் பொருந்திய ஊர் இந்த பாகனூர் கூற்றமாகும்.
இதன்காலம் கி.மு.2ம் நூற்றாண்டாகும்







கொங்கர்புளியன்கொம்பு கல்வெட்டுகளுக்கு விளக்கம் அறிய click https://www.vallamai.com/?p=101860
ReplyDelete