தமிழி கல்வெட்டுகள்-07
கருங்காலக்குடி தமிழி:
மதுரை-திருச்சி புறவழிச்சாலையில் இங்குள்ள ஊரகப்பகுதியில் "பஞ்சபாண்டவர் குட்டு" எனும் குன்றில் ஓர்குகைத்தளம் அமைந்துள்ளது, அதன் முகப்பில் தமிழிகல்வெட்டு ஒன்றுள்ளது. குகைத்தளத்தின் பக்கவாட்டில் ஓர் தீர்த்தங்கரர் சிற்பம் உள்ளது. அதன் கீழே வட்டெழுத்து கல்வெட்டுள்ளது. அச்சணந்தி என்பவர் இச்சிற்பத்தை செய்தவர் என அக்கல்வெட்டு கூறுகிறது! அச்சணந்தியும், அவரது தாயார் குணமதியும் தமிழகம் முழுக்க நிறைய தீர்த்தங்கரர் உருவங்களை செய்வித்துள்ளனர். மேலும் இக்குகைத்தளத்தின் மேலே சில கற்படுக்கைகள் காணப்படுகின்றன. அவற்றிலும் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் காணப்படுகிறது. இங்கு பாடல் வடிவில் ஓர் கல்வெட்டுள்ளது. பாண்டியனிடம் அமைச்சராய் இருந்த பள்ளத்தரையன் என்பவர் ஓர் கண்ணடை(நீர்நிலை) அமைத்ததை இக்கல்வெட்டு கூறுகிறது.
தமிழி கல்வெட்டு:
"ஏழைய் ஊர் அரிதின் பளிய்"
விளக்கம்:
இக்கல்வெட்டில் பயின்று வரும் நெடில் சொற்களை குறிலாக படித்து பொருள் கொள்ளப்படுகிறது. இதே போன்ற முறை ஆந்திர மாநிலம் பட்டிப்புரோலுவில் கிடைத்த ஈமப்பேழையில் உள்ள பிராமி கல்வெட்டிலும் படிக்கப்பட்டது. ஏழையூர் எனும் ஊரைச்சேர்ந்த அரிதி என்பவர் இப்பள்ளியை அமைத்துக் கொடுத்தவர் என்பது இதன் பொருளாகும். இக்கல்வெட்டு கி.மு.2 ம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
இக்கல்வெட்டு குறித்த காணொளிக்கு:









No comments:
Post a Comment