தமிழி கல்வெட்டு-04

தமிழி கல்வெட்டு-04

ஆனைமலை தமிழி:

மதுரை-மேலூர் சாலையில் ஒத்தக்கடை அருகேயுள்ள ஊர் நரசிங்கம் அவ்வூரில் உள்ள மலையே ஆனைமலை. பெரியமலைக்குன்றாய் பிரம்மாண்டமாய் காட்சியளிக்கிறது. மதுரை-திருச்சி புறவழிச்சாலையில் பயணிப்போர் இம்மலையை கண்டிருப்பர். பார்ப்பதற்கு துதிக்கையை முன்னே நீட்டி,ஒரு யானை படுத்துள்ளது போலவே காட்சியளிக்கும். அதனாலேயே இம்மலைக்கு இக்காரணப்பெயர் வந்நது. 2000 வருடமாய் இம்மலை இதேபேரில் அழைக்கப்பட்டதற்கு இம்மலையில் உள்ள தமிழி கல்வேட்டே சான்று. 1906 ல் சுப்ரமணிய ஐயரால் இக்கல்வெட்டு கண்டறியப்பட்டது. இக்குன்றின் உச்சிப்பகுதி குகைத்தளத்தில் படுக்கைகளும், குகையின் மேற்புற முகப்பில் நீர் உள்ளேபுகாவண்ணம் ஒரு நீர்வடி வெட்டப்பட்டுள்ளது. இதிலேதான் தமிழி கல்வெட்டு காணப்படுகிறது.

கல்வெட்டு:

இவகுன்றத்து உறையுள் பாதந்தான் ஏரி ஆரிதன்
அத்துவாயி அரட்ட காயிபன்

விளக்கம்:

சமஸ்கிருதத்தில் யானைக்கு "இவம்" என ஒரு பொருள் உண்டு. இவகுன்றம் எனில் யானைக்குன்றம் அல்லது மலை எனக்கொள்ளலாம்.உறையுள் என்பதனை உறைவிடம் எனக்கொள்ளலாம். பாதந்தான் என்பதற்கு படுக்கை செய்தான் என பொருள்.
ஏரி என்னும் ஊரைச்சேர்ந்த ஆரிதன், அரட்டகாயிபன் எனும் இரு துறவியருக்காக ஏற்படுத்தப்பட்ட இருக்கை என்பது இதன் பொருள். காயிபன் என்பது அவரது கோத்திர பெயராய் இருக்கலாம். இக்கல்வெட்டு கி.பி இரண்டாம் நூற்றாண்டு என கணிக்கப்பட்டுள்ளது.






No comments:

Post a Comment