தமிழி எழுத்துகள்-02

தமிழி எழுத்துகள்-02

மாங்குளம் தமிழி:
மதுரைக்காஞ்சி, குறுந்தொகை, அகநானூறு போன்ற சங்க இலக்கியங்களில்  குறிப்புகள் உள்ள பழம்பெரும் ஊர் மாங்குடி. இன்று அவ்வூர் மீனாட்சிபுரம், கழுகுமலை, ஒவாமலை என அழைக்கப்படுகிறது. மாங்குடி மருதனார், மாங்குடி கிழார் போன்ற சங்க காலப் புலவர்கள் வாழ்ந்த ஊர் இவ்வூரே.  சேர நாட்டுக்கும் பாண்டிய நாட்டுக்கும் பயணப்படும் வழியில் இம்மலை அமைந்துள்ளது. ட்டது. 1882ல் ராபர்ட் சீவல் என்பவரால் பார்வையிடப்பட்டுள்ளார். எனினும் முதலில் இதனை முயற்சித்துப் படித்தவர் வெங்கோபராவ் ஆவார்.1906ல் மாங்குளம் கல்வெட்டு படிக்கப்பட்டது. இலக்கியம் மற்றும் கல்வெட்டுகளில் இவ்வூர்பற்றி தரவுகள் கிடைத்ததால் 2002 ம் ஆண்டு தமிழக தொல்லியல்துறையினரால் அகழாய்வு செய்யப்பட்டது.நாயக்கர்புஞ்சை மற்றும் லிங்கத்திடல் என்ற இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மூன்று மாதிரி அகழ்வுக் குழிகள் தோண்டப்பட்டன. அதைத் தொடர்ந்து, நாயக்கர்புஞ்சையில் 10 அகழ்வுக் குழிகள் தோண்டப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. புதிய கற்கால கருவிகள், 200 ற்கு மேற்பட்ட குறியீடுகள், தமிழி எழுத்துள்ள பானையும் கிடைத்தது இதில், 

"குறுமான்கலம் அதன் யியானை பொ”
எனும் நீண்ட வாசகம் உள்ள எழுத்து கிடைத்தது. இங்கு கிடைத்த செங்கற்கட்டுமானம், தமிழி எழுத்துகள் அடிப்படையில் நோக்குங்கால் இவ்வூர் 2300 வருடமாகவே சிறப்புற்றிருந்தது தெரிய் வந்தது. மக்கள் எழுத்தறிவுடன் குழுவாக வாழ்ந்ததையும் அறியலாம்.
குகைத்தளத்தில் கிடைத்த கல்வெட்டுகளை இனி காண்போம்.

முதல் கல்வெட்டு:

கணிய் நந்தஸிரிகுவன் கே தம்மம்
ஈத்த நெடுஞ்செழியன் பணாஅன்
கடலன் வழுதி கொட்டுபித்த பாளிய்

விளக்கம்:
நந்த ஸிரிகுவன் என்பவருக்கு சங்க காலப் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் பணியாள் கடலன் வழுதி என்பவர் பாளிய் (இருக்கை)அமைத்துக் கொடுத்துள்ளார். இதில் பாண்டியருக்கே உரித்தான கடலன், வழுதி, எனும் பெயர்கள் பயின்று வருகிறது! 

இரண்டாம் கல்வெட்டு:

கணிய் நந்த ஸிரிய்குவன்
தம்மம் ஈத்த நெடுஞ்செழியன் ஸாலகன
இளஞ்சடிகன் தந்தைய் சடிகன்
செஈய பாளிய்

விளக்கம்:

நெடுஞ் செழியனுடைய சகலனாகிய, இளஞ்சாடிகனின் தந்தை சடிகான் கணிய நந்தாஸிரியருக்கு பள்ளியைத் தர்மம் செய்துள்ளார்.

மூன்றாம் கல்வெட்டு:

கணிய நந்தஸிரிகுவன்
வெள் அறைய் நிகமது 
காவிதி கழிதிக அந்தை
அஸீதன் பிணஉ கொடுப்பிதோ

விளக்கம்:

செய்தி

வெள் அறைய் என்னும் ஊரிலுள்ள, (திருச்சியில் திருவெள்ளரை எனும் ஊர் உண்டு. அதேபோல் மாங்குளம் அருகே வெள்ளரிப்பட்டி எனும் ஊர் உண்டு. இருஊரில் ஏதேனும் ஒரு ஊராய் இருக்க வாய்ப்புள்ளது) வணிகக்குழுவைச் சேர்ந்த அந்தை அஸீதன் என்பவன் கணிய நந்தாஸிரியருக்கு பிணஉ (சன்னல், கயிறுகட்டு, பிளவு) கொடுத்ததைக் கூறுகிறது. வாணிகத்தில் சிறந்து விளங்குபவருக்குக் "காவிதி"என்று பட்டப்பெயர் வழங்குவர். காழிதிகம் என்பது முத்தைக் குறிக்கும். எனவே அந்தை அஸிதன் ஒரு முத்து வணிகன் என்பதை அறியலாம்.

நான்காம் கல்வெட்டு:

கணிய் நத்திய் கொடிய்அவன்

விளக்கம்:
கொடிய்அவன் என்பதனை கொட்டியவன், அதாவது இக்கல்வெட்டை வெட்டியவன் கனிநந்தி என்பது பொருள்

ஐந்தாம் கல்வெட்டு:

சந்தரிதன் கொடுபிதோன்

விளக்கம்:
இவ்விருக்கையை கொடுப்பித்தவன் சந்தரிதன் என பொருள்

ஆறாம் கல்வெட்டு:
வெள்அறை நிகமதொர் கொடிஓர்

விளக்கம்:

நிகமம் என்ற பிராகிருதச் சொல் வணிகக்குழுவினைக் குறிக்கும். இந்தப் பாறையைக் கொட்டிக் கொடுத்தவர் வெள் அறை என்னும் ஊரிலுள்ள வணிகக் குழுக்கள் ஆவர்.

புலிமான்கோம்பை கல்வெட்டுகள் கண்டறியும்முன் தமிழின் தொன்மையான கல்வெட்டு இதுவேயாகும். இதன் காலம் கி.மு.3 நூற்றாண்டு என கணித்துள்ளனர். வருங்காலங்களில் மீளாய்வு செய்து அதற்கு முன்னர் கூட செல்லும்.








No comments:

Post a Comment