தமிழி கல்வெட்டுகள்-16
விக்ரமங்கலம் தமிழி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள ஊர் விக்ரமங்கலம். இங்குள்ள குகைத்தளத்தில் ஆறு தமிழி கல்வெட்டுகள் உள்ளது.
முதல் கல்வெட்டு:
எஇய்ல் அர்இய்தன் சேவித்ஒன்
விளக்கம்:
ஏஇய்ல் எனும் ஊரைச்சேர்ந்த 'ஆரிதன்' செய்வித்தது என்பது இதன் பொருள்.
இக்கல்வெட்டு இங்குள்ள ஒரு குகைத்தளத்தின் விதானத்தில் உள்ளது.
இரண்டாம் கல்வெட்டு:
எம்ஊர் சிழிவன் அதன்தியன்
விளக்கம்:
எம்ஊரௌ அல்லது "ஏமஊர்"ரை சேர்ந்த சிழிவன் அதன்தியன் என்பவர் இங்கு தானமளித்துள்ளார். சிழிவன் எனும் பெயர் அரிட்டாப்பட்டியிலும் தியன் எனும் சொல் புலிமான்கோம்பை நடுகல்லிலும் பயின்று வருகிறது!
இக்கல்வெட்டு பெரிய குகைத்தளத்தின் நெற்றிப்பகுதியில் வெட்டப்பட்டுள்ளது
மூன்றாம் கல்வெட்டு:
அந்தைய் பிகன் மகன் வெந்அதன்
விளக்கம்:
அந்தைய் பிகன் என்பவருடைய மகன் அளித்த தானம் என்பதோ இதன் பொருள்.
இக்கல்வெட்டு படுக்கை ஒன்றின் தலைப்பகுதியில் உள்ளது.
நான்காம் கல்வெட்டு:
பேதலை குவிரன்
விளக்கம்:
பேத்தலை எனும் ஊரினை சேர்ந்த "குவிரன்" என்பவரால் இப்படுக்கை வெட்டப்பட்டுள்ளது.
முதல் கல்வெட்டுக்கு அருகேயுள்ள படுக்கையில் இக்கல்வெட்டு உள்ளது. இதில் பயின்று வரும் குவிரன் எனும் பெயர் கீழடி மற்றும் இன்னும்பிற தமிழி கல்வெட்டுகளில் வருகிறது!
ஐந்தாம் கல்வெட்டு:
செங்(கு)விரன்
விளக்கம்:
செங்குவிரன் என்பவரால் இப்படுக்கை வெட்டப்பட்டுள்ளது.
படுக்கையொன்றின் முகப்பில் இக்கல்வெட்டு உள்ளது.
ஆறாம் கல்வெட்டு:
கு(வி)ரதன்
விளக்கம்:
குவிரதன் என்பவரால் இப்படுக்கை ஏற்டுத்தப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டுகள் அனைத்தும் கி.மு.இரண்டாம் நூற்றாண்டில் வெட்டப்பட்டுள்ளது! இம்மலைத்தொடர் பாண்டிய-சேர கணவாய் பகுதியில் அமைந்துள்ளது. முதன்முதலாய் இக்கல்வெட்டு 1923 ல் கண்டறியப்பட்டது.






No comments:
Post a Comment