எழுத்துகளின் தோற்றம் எவ்வாறு இருந்திருக்கும்? ஏதோ ஒலி எழுப்பி சைகை பாசை பேசிட்டு இருந்த மனுஷன், Migration ஆகி போயிட்டே இருக்குறப்பயோ, அல்லது ஏதோ இறைதேடி வர தன்னோட குழுவுக்கு புரிறதுக்காகவோ, தன்னோட குழுவில் எல்லோருக்கும் புரியிற மாதிரி உட்கார்ந்து பேசி ஒரு Writing system உருவாக்கியிருக்கனும். இதோட வளர்ச்சிய மூனு வகையா அடையாளப்படுத்தியிருக்காங்க
மானுடவியலார்கள்.
ஆரம்ப எழுத்து முறை:
நமது வாட்ஸ்அப் ஸ்மைலி போல உள்ள உள்ள எழுத்துகள் உருவஎழுத்து(Pictograph) உதாரணமாய் இதில் விலங்குககள், பறவைகள், மனித உருவங்கள் மட்டுமே இருக்கும். அவற்றின் இயக்கங்கள் காட்டப்பட்டிருக்காது. அடுத்ததாய் கருத்தெழுத்து (Ideograph) இதில் உயர்தினை, அஃறிணையின் இயக்கங்கள் காட்டப்பட்டிருக்கும், பறவை பறப்பது போல், மனிதனின் இயக்கங்களை காட்டப்பட்டிருக்கும். அடுத்து ஒலியெழுத்துகள்(phonograph) ஒரு சொல்லுக்கு அடையாளமாய் ஒரு எழுத்தினை அடையாளமாய் எழுதுவது. இவை குறியீட்டுக்கு முந்தைய காலகட்டம். இதன் இறுதி நிலை குறியீடுகள் இவையே தமிழி எழுத்திற்கு முந்தைய நிலை என கருதுகோள் வைக்கப்பட்டு பிற்பாடு தமிழகத்தில் கிடைத்த வல்லம் அகழாய்வின் மூலம் அது நிருபிக்கப்பட்டது.
இந்திய எழுத்துகள்:
கி.மு முதல் நூற்றாண்டு என பொதுவாய் கருதப்படும் சமவயங்க சுத்த எனும் சமணநூல் அக்காலத்தில் வழக்கிலிருந்த 18 எழுத்துமுறைகளை கூறுகிறது. அதில் 17 வதாய் தாமிழி என கூறுகிறது. அது நமது தமிழி எழுத்தே. இத்துனை எழுத்துகள் குறிப்பிடப்படினும் இந்திய அளவில் பழமையான எழுத்து மொழி தமிழே என்பதற்கு நம்மிடம் கி.மு 8 ம் நூற்றாண்டு சான்றே உள்ளது. நமது சங்க இலக்கியங்கள் யாவையும் இந்த எழுத்து வடிவிலே பனையோலைகளில் எழுதப்பட்டு, காலஇடைவெளிகளில் படியெடுக்கப்பட்டு இன்று நம் கைகளில் கிடைக்கிறது. பானையோடுகளில் கீறல்களில் (Graffiti) நிறைய பெயர்கள் வருகிறது. இவ்வழக்கம் இன்றும் நமது வீடுகளில் காணலாம். இன்று கூட நமது பாத்திரங்களில் பெயர்களை Engraved செய்யும் வழக்கம் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. நம் ஊரில் பாறை. கீறல் தவிர்த்து இதுவரை 5 தமிழி கல்வெட்டுகள் கிடைத்துள்ளது. இதன் வாயிலாக எளியோரும் எழுத்தறிவு பெற்றிருப்பது அறியலாம். குகைத்தளங்களில் கிடைத்த தமிழி கல்வெட்டினை காண்போம்.
குடுமியான்மலை தமிழி:
புதுக்கோட்டையிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சிற்றூர் இது. சங்காலத்தில் வழங்கப்பட்ட ஒல்லையூர் என்ற ஊரின் பெயரிலேயே பிந்தைய கல்வெட்டுகளிலும் ஒல்லையூர் கூற்றத்து குன்றியூர் நாட்டு திருநலக்குன்றம் என்று இவ்வூர் அழைக்கப்பட்டுள்ளது. இங்கே புகழ்பெற்ற இசைக்கல்வெட்டும் பிரசித்தி பெற்ற குடைவரைக்கோவிலும் பாண்டியர் கால கோயில் கட்டுமானமும் நாயக்கர் கால சிற்பங்களும் நிறைந்துள்ளன. மேலதிக தகவல்களை பின்னொரு பகுதியில் விரிவாக காண்போம். இக்குடுமியான்மலையின் கீழ்பகுதியில் குடபோக கோவிலின் வரலாறு சற்றொப்ப 1400 ஆண்டுகள் பழமையெனில் அம்மலையின் பின்பகுதியில் சுமார் 2300 ஆண்டு பழமையான (பொயுமு 3ம் நூற்றாண்டு) தமிழி எழுத்து கல்வெட்டு காணப்படுகிறது. அதன் சிறப்பினை காண்போம்.
மலையின் பின்புறம் கடந்து சற்று மேலேறினால் வலப்புறத்தில் சில கற்படுக்கைகளும் சற்று மங்கிய நிலையில் ஒரு தமிழி கல்வெட்டும் காணப்படுகிறது. அக்கல்வெட்டின் விளக்கத்தை காண்போம்.
'நாழள் கொற்றந்தய் ப(ளி)ய்' என்பதே அதன் பாடமாக வரலாற்று அறிஞர்கள் கணித்துள்ளனர். நாழள் என்பது சங்ககாலத்தில் குறிஞ்சிப்பாட்டில் குறிக்கப்படும் மலர் வகைகளில் ஒன்று, இம்மலர் இன்று புலிநகக்கொன்றை, மயிற்கொன்றை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இம்மலரின் பெயரில் அமைக்கப்பட்ட ஊரே இங்கு குறிக்கப்படுகிறது, அந்தை என்பது மரியாதைக்குரிய சொல், கொற்றந்தை என்பவர் இங்கு மரியாதைக்குரியவராக காட்டப்படுகிறார். 'நாழள் ஊரினை சார்ந்த கொற்றந்தை என்பவர் செய்த பள்ளி' என்பதே இவ்வாசகத்தின் விளக்கம். இன்றைக்கு ஏறத்தாழ 2300 ஆண்டுகள் பழமையான எழுத்துருவினில், எனில் இதன் முக்கியத்துவத்தை சொல்லி உணரத்தேவையில்லை, இம்மாதிரி கல்வெட்டுகளால் தானே நம்மொழி செம்மொழியாயிருக்கும். இன்று இதன் நிலையாதெனில் இக்கல்வெட்டை அடையாளம் காண்பதற்கே சிரமப்பட வேண்டியுள்ளது, இதுவே யதார்த்த நிலை . 1991ம் வருடம் இக்கல்வெட்டை கண்டறிந்தனர்.
Pictograph
சிந்து சமவெளி குறியீடுகள்
Ideograph
ஞாழல் மலர்
குடிமியான் மலை தமிழி




No comments:
Post a Comment